தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்தது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்தது
Updated on
1 min read

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,765-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.46,120க்கும் விற்பனையானது. இதே போல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.49,880க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கு விற்பனையாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in