Published : 04 Jan 2018 10:32 AM
Last Updated : 04 Jan 2018 10:32 AM

நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 7 சதவீதத்துக்கு கீழ் இருக்கும்: பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு

நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 7 சதவீதத்துக்கு கீழ் இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கின்றனர். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு நீக்கம் ஆகிய காரணங்களால் குறைவான வளர்ச்சி இருக்கும் என கணித்திருக்கிறார்கள். கடந்த 2016-17-ம் நிதி ஆண்டு வளர்ச்சி 7.1 சதவீதமாகவும், 2015-16-ம் நிதி ஆண்டின் வளர்ச்சி 8 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது

நடப்பு நிதி ஆண்டில் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டில் நல்ல வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக நடப்பு நிதி ஆண்டில் ஏழு சதவீத வளர்ச்சியை தாண்டுவது கடினம் என எஸ்பிஐ ரிசர்ச் நிறுவனத்தின் சௌமியா கந்தி கோஷ் தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டில் 6.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்றும் கோஷ் தெரிவித்தார்.

திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவும் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 6.2% முதல் 6.3 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என கணித்திருக்கிறார். ஆக்ஸிஸ் வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சுகந்தா பட்டாச்சார்யா கூறும் போது 6.6% முதல் 6.8 சதவீத வளர்ச்சி இருக்கும் என தெரிவித்தார். ஒரு வேளை வரி வசூல் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஜிடிபி விகிதம் கொஞ்சம் உயர்வாக இருக்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x