

தொடர்ந்து எட்டு வர்த்தக தினங் களாக ஏறுமுகத்தில் இருந்த பங்குச்சந்தைகள் வெள்ளிக் கிழமை சரிவில் முடிவடைந்தது. இருந்தாலும் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் நடுவில் புதிய உச்சத்தை தொட்டது. வர்த்த கத்தின் இடையில் சென்செக்ஸ் 26300 புள்ளியையும், நிப்டி 7840 புள்ளியையும் தொட்டன.
இந்த வருடத்தில் இதுவரை இந்திய பங்குச்சந்தை குறியீட் டெண் சுமார் 24 சதவீதம் உயர்ந் திருக்கிறது.
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி ரிசர்வ் வங்கி தன்னுடைய கடன் கொள்கையை வெளியிட இருக்கிறது. இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கித்தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்காது என்று சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் முடிவை பொறுத்துதான் சந்தையின் அடுத்த கட்டம் இருக்கும். அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஏற்றம் இருந்தாலும் குறுகிய காலத்தில் சந்தையில் சிறிய சரிவு வரலாம் என்றே வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.