Published : 02 Jan 2018 11:38 AM
Last Updated : 02 Jan 2018 11:38 AM

அரபிக் கடல் பகுதியில் எண்ணெய் கண்டுபிடிப்பு: ஓஎன்ஜிசி நிறுவனம் சாதனை

பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) நிறுவனம் அரபிக் கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயுவைக் கண்டறிந்துள்ளதாக மத்திய பெட் ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித் துள்ளார்.

மக்களவைக்கு புத்தாண்டு தினத்தன்று விடுமுறை ஆதலால், தன் துறை சார்ந்த கேள்விகளுக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார் பிரதான். இந்த பதில்கள் மக்களவை இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

மும்பை ஹை கடல் பகுதியில் எண்ணெய் கிணறு டபிள்யூஓ-24-3 பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது 9 பகுதிகளில் எண்ணெய், எரிவாயு இருப்பதற்கான தடயங்கள் தென்பட்டன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கிணறிலிருந்து 2,974 லட்சம் டன் எண்ணெய் மற்றும் அதற்கு இணையான எரிவாயு கிடைக் கும் என தெரிகிறது. 9-வது கிணறு பகுதியில் நாளொன்றுக்கு 3,310 பீப்பாய் எண்ணெய் கிடைக்கும் என்றும், 17,071 கன மீட்டர் எரிவாயு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x