Published : 10 Jul 2014 11:29 AM
Last Updated : 10 Jul 2014 11:29 AM

ஹர்ஷ் திங்ரா - இவரைத் தெரியுமா?

$ பம்பார்டியர் இந்தியா நிறுவனத்தின் தலைவர்.

$ டெல்லி பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கும், மார்க்கெட்டிங் பிரிவில் எம்.பி.ஏவும் படித்தவர்.

$ படித்தவுடன் உஷா நிறுவனத்தில் மூன்று வருடங்கள் மேலாளராக கார்ப்பரேட் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

$ கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனத்தில் 16 ஆண்டுகளும், மிட்சுபிஷி நிறுவனத்தில் இரண்டு வருடங்களும் வேலை பார்த்தவர். 2010-ம் ஆண்டு பம்பார்டியர் நிறுவனத்தில் இந்திய தலைவராக சேர்ந்தார்.

$ ரயில்வே பட்ஜெட் குறித்து பேசிய இவர், இந்தியா வேகமான காலத்துக்கு தயாராகி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் 160 முதல் 200 கிலோமீட்டர் வேகம் செல்லும் ரயில்கள் இந்தியாவில் ஓடும் என்றார்.

$ ரயில்வேயில் அந்நிய முதலீட்டை அனுமதித்தன் மூலம் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x