

ராணிப்பேட்டை: தமிழகத்தில் வெங்காயம் உட்பட காய்கறி விலை உயர்வுக்கு விவ சாயிகள் மற்றும் வியாபாரிகள் கடுகளவும் காரணமில்லை என வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள அல்லிக்குளம் கூட்டுச்சாலையில் திருமண மண்டபம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார். பின்னர் அவர், செய்தியாளர் களிடம் கூறும்போது, "சென்னை பூந்தமல்லி பைபாஸ் சாலையில் இருந்து இங்கு வருவதற்கு (ராணிப்பேட்டை) குறைந்தபட்சம் மூன்றரை மணி நேரம் ஆகிறது.
இதற்கு, காரணம் சாலை விரிவாக்கம், மேம்பாலம் பணிகள் பல ஆண்டுகளாக மேற்கொண்டும் தற்போது வரை நிறைவடையாமல் இருப்பதே. ஆனால், அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முராக நாடாளுமன்றத்தின் தேர்தல் நோக்கி பயணம் செய்து கொண் டிருக்கிறார்கள். சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வில்லை என்றால் வரும் வாரத்தில் வேலூர் மண்டலத்தலைவர் ஆம்பூர் கிருஷ்ணன் தலைமையில் ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அனைத்து பொது அமைப்புகள் மற்றும் ஆட்டோ, வேன், வாடகை கார் ஒட்டுபவர்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இது, மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் போராட்டமாக இருக்கும். மேலும், விவசாயிகள் பயன்படுத்தும் மருந்து மற்றும் உரங்களுக்கான ஜிஎஸ்டியை மத்திய அரசு முழுவதுமாக விலக்கு அளிக்க வேண்டும். மழைக்காலத்தில் காய்கறி அழுகும் நிலை ஏற்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து காய்கறி விளையும் போது அதை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும். வெங்காயம் விலை உயர்வுக்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடுகளவும் காரணமில்லை. சுங்க கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் காய்கறி விலை உயரும். இதை தவிர்க்க வேண்டுமென்றால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இதில், வணிகர் சங்க பேரமைப்பின் மண்டலத்தலைவர் கிருஷ்ணன், மாவட்டத்தலைவர் சரவணன், துணைத்தலைவர் பாஸ் கரன் உட்பட பலர் பங்கேற்றனர். மழைக்காலத்தில் காய்கறி அழுகும் நிலை ஏற்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் காய்கறிகளை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும்.