Published : 03 Jan 2018 10:17 AM
Last Updated : 03 Jan 2018 10:17 AM

இவரைத் தெரியுமா?- கார்லோஸ் டவரெஸ்

பியூஜியாட் மோட்டார் சைக்கிளை தயாரிக்கும் பிஎஸ்ஏ குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.

1981-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை ரெனால்ட் குழுமத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அமெரிக்க பிராந்திய தலைவராக இருந்தவர்.

2009-ம் ஆண்டில் நிசான் மோட்டார் நிறுவனத்தின் வட அமெரிக்க செயல் துணை தலைவர், நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்றார். 2011-ம் ஆண்டில் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

அவ்டோவாஸ் மோட்டார் வாகன நிறுவனத்தில் இயக்குநராக இருந்தவர்.

2016-ம் ஆண்டிலிருந்து ஏர்பஸ் குழுமத்தில் தினசரி பொறுப்புகள் இல்லாத இயக்குநராக உள்ளார். டோட்டல், பிசிஎம்ஏ ஹோல்டிங்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார்.

பிரான்சில் உள்ள எகோல் மத்திய கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x