Published : 11 Jan 2018 10:38 AM
Last Updated : 11 Jan 2018 10:38 AM

மாணவ விடுதி மெஸ்களுக்கு 5% ஜிஎஸ்டி: நிதி அமைச்சகம்

மாணவ விடுதிகளில் உள்ள மெஸ்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களுக்காக நடத்தப்படும் இத்தகைய மெஸ்களை கல்வி நிறுவனங்கள் நடத்தினாலும் அல்லது வெளியார் நடத்தினாலும் வரி விதிப்புக்குள்ளாகும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கல்லூரி மாணவர் விடுதிகளில் செயல்படும் மெஸ்களுக்கு வரி விதிப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம் (சிபிஇசி) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உணவு விடுதிகளில் வழங்கப்படும் குளிர்பானங்கள், உணவு அனைத்தும் 5 சதவீத வரிவிதிப்புக்குள்ளாகும். ஆனால் இதன் மீது உள்ளீட்டு வரி வரவு (இன்புட் டாக்ஸ் கிரெடிக்) கோர முடியாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த உணவு விடுதிகளை கல்வி நிறுவனங்கள் நிர்வகித்தாலும், தனியார் நிர்வகித்தாலும் வரி விதிப்பு தவிர்க்க முடியாதது என்றும் குறிப்பிட்டுள்ளது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x