Published : 31 Jan 2018 10:15 AM
Last Updated : 31 Jan 2018 10:15 AM

36 விமானங்களை வாங்கும் எமிரேட்ஸ்

எமிரேட்ஸ் விமான நிறுவனம் 1,600 கோடி டாலர் மதிப்பில் 36 ஏர் பஸ் ஏ380 ரக விமானங்களை வாங்கவுள்ளது. இந்த விமானங்களை 2020-ம் ஆண்டில் விமான நிறுவனம் சப்ளை செய்யும். எமிரேட்ஸ் இயக்கும் விமானங்கள் ஜெனரல் எலெக்ட்ரிகல்ஸ் மற் றும் ரோல்ஸ் ராய்ஸ் இன்ஜின் கள் கொண்டவை என்பதால், புதிதாக வாங்கவுள்ள விமா ன ங்களும் உயர் வகை இன்ஜின் கொண்டவையாக இருக்கும்.

தற்போது எமிரேட்ஸ் நிறுவனத்தில் 101 ஏர்பஸ் ஏ380 விமானங்கள் உள்ளன. கூடுதலாக 41 விமானங்கள் வர உள்ளன. புதிதாக ஆர்டர் அளித்துள்ள 36 விமானங்களையும் சேர்த்தால் இந்நிறுவனத்தின் விமான எண்ணிக்கை 178 ஆக உயரும்.

எமிரேட்ஸ் குழுமத்தின் தலை வர் ஷேக் அகமது பின் சையது அல் மக்தோம் மற்றும் துபாயில் எமிரேட்ஸ் தலைமையிட வாடிக்கையாளர் பிரிவின் முதன்மை இயக்க அலுவலர் ஜான் லீ ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x