Published : 10 Jan 2018 10:10 AM
Last Updated : 10 Jan 2018 10:10 AM

ஃபுரூட்டி விளம்பர தூதர் அல்லு அர்ஜுன்

பார்லி அக்ரோ நிறுவனத்தின் முக்கிய பிராண்டான ஃபுரூட்டியின் விளம்பர தூதுவராக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

நாட்டின் முக்கியமான மாம்பழ குளிர்பானம் இதுவாகும். இதன் சந்தை மதிப்பு ரூ.2,000 கோடியாகும். வரும் 2022-ம் ஆண்டில் ரூ.10,000 கோடி அளவுக்கு விரிவடைவதற்கான உத்தியில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக விளம்பர தூதராக அல்லு அர்ஜுன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

தென் இந்தியா முக்கியமான சந்தையாகும். இங்கு மார்க்கெட்டிங், விற்பனை, விநியோகம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் கவனம் செலுத்தி வருவதாக நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் நதியா சவுகான் தெரிவித்தார். அல்லு அர்ஜுன் உள்ள ஃபுரூ ட்டி விளம்பரங்கள் கோடைக் காலத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x