

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் கொல்கத்தாவில் மோதின. இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் 49-வது சாதனை சதம், ஜடேஜாவின் அபார பந்து வீச்சு ஆகியவற்றால் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியை ஹாட் ஸ்டார் செயலியில் 4.4 கோடி பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் உலகளாவிய ஸ்ட்ரீமிங்கில் புதிய சாதனையை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த மாதம் 22-ம் தேதி இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தை ஹாட் ஸ்டார் செயலியில் 4.3 கோடி பயனாளர்கள் பார்த்திருந்தனர்.