வட்டியைக் குறைத்தது எஸ்பிஐ வங்கி: 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர்

வட்டியைக் குறைத்தது எஸ்பிஐ வங்கி: 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர்
Updated on
1 min read

எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி, 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.

நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அடிப்படை வட்டி விகிதத்தை 8.95 சதவீதத்தில் இருந்து, 8.65 சதவீதமாக குறைத்துள்ளது. அதுபோலவே அடிப்படை முதன்மை கடன் வட்டி விகிதமும், 13.70 சதவீதத்தில் இருந்து 13.40 ரூபயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஆண்டுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படும் எம்எல்சிஆர் வட்டி விகிதத்தில் (டெபாசிட் உள்ளிட்டவற்றிக்கான வட்டி விகிதம்) மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதன்மூலம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன் பெறுவர். இந்த வட்டி குறைப்பு இன்று (திங்கள்) முதல் அமலுக்கு வந்தது.

இதுமட்டுமின்றி வீட்டுக்கடன் வாங்கும் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் வேறு வங்கிகளில் பெற்ற வீட்டுக்கடன் கணக்கை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு மாற்றும் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட வீட்டுக்கடனுக்கான பிராசஸிங் கட்டண ரத்து, வரும் மார்ச் வரை தொடரும் எனவும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in