Published : 04 Nov 2023 06:08 AM
Last Updated : 04 Nov 2023 06:08 AM
சிவகாசி: சிவகாசியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சிறு உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.
சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்களில் தீபாவளி சீசன் பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடைபெறும்.
உற்பத்தி செய்த பட்டாசுகளை வெயிலில் உலர வைத்த பிறகு பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்புவர். தற்போது தீபாவளி நெருங்கியதால் ஆலைகளில் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் வெயில் குறைந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக தினமும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் உற்பத்தி செய்த பட்டாசுகளை உலர வைத்து பேக்கிங் செய்து, விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை.
தீபாவளி நெருங்கும் நேரத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் சிறு உற்பத்தியாளர்கள் தயாரித்த பட்டாசுகளை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT