Published : 13 Jan 2018 10:14 AM
Last Updated : 13 Jan 2018 10:14 AM

நடப்பு நிதியாண்டு 3-வது காலாண்டில் இன்ஃபோசிஸ் நிகர லாபம் 38% உயர்வு

இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான இன்ஃபோ சிஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 38.3 சதவீதம் உயர்ந்து ரூ.5,129 கோடி யாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,708 கோடி யாக இருந்தது. நிறுவனத்தின் வருமானம் 3 சதவீதம் உயர்ந்து ரூ.17,794 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.17,273 கோடியாக வருமானம் இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் வருமான வளர்ச்சி 5.5 சதவீதம் முதல் 6.5 சதவீதமாக இருக்கும் என நிறுவனம் கணித்திருக்கிறது.

அமெரிக்க வருமான வரி துறை அமைப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக வரிக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1,432 கோடி திரும்ப வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது.

நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சலில் பரேக் கடந்த 2-ம் தேதி பொறுப்பேற்றுகொண்டார். அவர் கலந்து கொண்ட முதல் காலாண்டு முடிவு கூட்டம் இதுதான். மூன்றாம் காலாண்டு முடிவுகள் சிறப்பாக வந்திருக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களின் புதிய தேவைகளை தீர்ப் பதற்கான நடவடிக்கையை எடுப் போம் என சலில் பரேக் தெரி வித்தார்.

இது தொடர்பாக சலில் பரேக் மேலும் கூறியதாவது: பணியாளர்கள், முக்கிய உயரதிகாரிகள், இயக்குநர் குழு மற்றும் வாடிக்கையாளர்களுடன் உரையாடுவதில் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன். அதன் பிறகு ஏப்ரலில் எதிர்கால திட்டத்தை வெளியிடுவோம். டிஜிட்டல் மாற்றங்கள் காரணமாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய தேவைகள் உருவாகி இருக்கின்றன. இதன் மூலம் நிறுவனத்துக்கு பல வாய்ப்புகள் உருவாகி உள்ளன என சலீல் பரேக் கூறினார்.

டிசம்பர் காலாண்டில் புதிதாக 79 வாடிக்கையாளர்களை நிறுவனம் சேர்த்திருக்கிறது. டிசம்பர் இறுதியில் மொத்தம் 1,191 வாடிக்கையாளர்கள் உள்ளனர். நிறுவனத்தில் இருந்து வெளி யேறுவோர் விகிதம் வெகுவாக குறைந்திருக்கிறது. தற்போது 15.8 சதவீதம் என்னும் அளவில் உள்ளது. டிசம்பர் காலாண்டு இறுதியில் 2.01 லட்சம் பணியாளர்கள் உள்ளனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக நிறுவனத்தின் முக்கிய உயரதிகாரிகளில் ஒருவரான ராஜேஷ் கே மூர்த்தி ராஜினாமா செய்ய முடிவெடுத்திருக்கிறார். இருந்தாலும் வரும் 31-ம் தேதி வரை பணியில் தொடருவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு 0.25 சதவீதம் உயர்ந்து முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x