

எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட (ஜிஎம்) சோயாபீன் விதைகளை அறிமுகம் செய்வது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று தாவர விதை எண்ணெய் எடுக்கும் ஆலை அதிபர்கள் சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங்கிடம் அளித்த கோரிக்கை மனுவில் எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா பாதிக்கும் குறைவான அளவே உற்பத்தி செய்கிறது. இதை அதிகரிக்க வேண்டுமெனில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அறிமுகம் செய்வது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
உற்பத்தி வரிச் சலுகை நீடிக்க வேண்டும்
ஆட்டோமொபைல் துறையில் தேக்க நிலை போக வேண்டுமெனில் கடந்த இடைக்கால பட்ஜெட்டில் அளிக்கப்பட்ட வரிச் சலுகைகள் தொடர வேண்டும் என்று ஆட்டோமொபைல் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த சலுகை நடப்பு நிதி ஆண்டு முழுவதும் (ஏப்ரல் 2015) தொடர வேண்டும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கருதுகின்றனர்.