Published : 01 Jan 2018 10:47 AM
Last Updated : 01 Jan 2018 10:47 AM

`செல்ல வேண்டிய தூரம் அதிகம் ’: ஏர் இந்தியா தலைவர் பணியாளர்களுக்கு கடிதம்

நிறுவனத்தை லாப பாதைக்கு திருப்பும் முயற்சியில் நாம் இருக்கிறோம். இதற்காக நாம் கடுமை யாக உழைத்து வருகிறோம். நம் உழைப்பின் பலன் சில முக்கியமான குறியீடுகளில் தெரிய தொடங்கி இருக்கிறது. ஆனாலும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என ஏர் இந்தியா தலைவர் பிரதீப் சிங் கரோலா தெரிவித்திருக்கிறார். பணியாளர்களுக்கு அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: நிறுவனத்தை லாப பாதைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. இதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். நம்முடைய செயல்பாடுகள் இந்த துறையின் சராசரி செயல்பாடுகளை விட அதிகமாக இருக்க வேண்டும். ஏர் இந்தியா நிறுவனத்தின் பழைய வசந்த காலத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு உங்கள் அனைவரது நீடித்த கடின உழைப்பு தேவை. நாம் இந்த துறையில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் சிறப்பாக செயல்பட வேண்டும்.

நேரம் தவறாமை, தூய்மை உள்ளிட்ட இதர விஷயங்களில் நம்முடைய போட்டியாளர்களை விட நாம் சிறப்பாகவே செயல் படுகிறோம். நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து பல கருத்துகள் இருந்தாலும் நாம் நம்முடைய செயல்பாடுகளில் கவனமாக இருப்போம் என பிரதீப் சிங் கரோலா தெரிவித்திருக்கிறார்.

நஷ்டத்தில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விலக்கி கொள்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இதற்கான கொள்கை அனுமதியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x