

மும்பை: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்து வருவதன் எதிரொலியால் திங்கள்கிழமை நடைபெற்றபங்கு வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதையடுத்து, முதலீட்டாளர்களுக்கு ரூ.7.59 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 826 புள்ளிகள் அதாவது 1.26 சதவீதம் சரிந்து 64,571-ல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே 895 புள்ளிகள் வரை வீழ்ச்சிகண்டது.
இஸ்ரேல்-காசா போரை யடுத்து, தொடர்ந்து நான்கு நாட்களாக பங்குச் சந்தை சரிவில் உள்ளது. இந்த நான்கு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 1,856 புள்ளிகள் (2.79%) குறைந்துள்ளது.