Published : 13 Jan 2018 10:14 am

Updated : 13 Jan 2018 10:15 am

 

Published : 13 Jan 2018 10:14 AM
Last Updated : 13 Jan 2018 10:15 AM

டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 5.2 சதவீதமாக அதிகரிப்பு

5-2

கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 4.88 சத வீதமாக இருந்தது. உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தது, அரசு ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டது போன்ற காரணங்களால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கான உற்பத்தி துறை குறியீட்டையும் டிசம்பர் மாதத்துக்கான நுகர்வோர் விலை குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கத்தையும் நேற்று மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. அதன்படி, நிறுவனங்கள் உற்பத்தி குறியீடு கடந்த நவம்பர் மாதத்தில் 8.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தக் குறியீடு 2.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. விலை உயர்வால் சாதாரண மக்கள் சிரமப்பட்ட போதிலும் பேரியல் பொருளாதார காரணிகள் சிறப்பாக இருந்ததன் காரணமாக நிறுவனங்கள் உற்பத்தி குறியீடு அதிகரித்திருக்கிறது. நிறுவனங்கள் உற்பத்தி குறியீடு அதிகரித்தது ஆய்வாளர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் பெரும்பாலான ஆய்வாளர்கள் நிறுவனங்கள் உற்பத்தி குறியீடு 4 சதவீதமாக இருக்கும் என்றே கணித்திருந்தனர்.

பணவீக்கத்தை பொறுத்தவரை தொடர்ச்சியாக 3 மாதங் கள் அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் 3.58 சதவீதமாக பணவீக்கம் இருந்தது. பின்பு நவம்பர் மாதத்தில் 4.88 சதவீதமாக உயர்ந்தது. தற்போது டிசம்பர் மாதத்தில் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். ரிசர்வ் வங்கி தனது நிதிகொள்கையை பிப்ரவரி 7-ம் தேதி அறிவிக்க இருக்கிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author