Published : 22 Oct 2023 08:18 AM
Last Updated : 22 Oct 2023 08:18 AM
புதுடெல்லி: ரூ.10,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மக்களிடம் இன்னும் உள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அதற்கு மாற்றாக ரூ.2,000 நோட்டுகள் கடந்த 2016-ம்ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டன. இந்நிலையில் ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ்வங்கி கடந்த மே 19-ம் தேதிஅறிவித்தது. இவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்யவும்,மாற்றிக் கொள்ளவும் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
அதன்பின் இந்த அவகாசம் அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தனிநபர்கள், தாங்கள் வைத்துள்ள ரூ.2,000 நோட்டுக்களை நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி கிளைகளில் செலுத்தி தங்கள் வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இந்த மாத துவக்கத்தில் அளித்த பேட்டியில் ரூ.2,000 நோட்டுக்களில் 87 சதவீதம் வங்கிக்கு டெபாசிட்டாக திரும்பிவிட்டது என்றும், மீதிப் பணம் நாடுமுழுவதும் மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
திரும்ப வரும்.. இந்நிலையில் டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில், ‘‘ ரூ.2,000 நோட்டுக்கள் வங்கிக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. ரூ.10,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுக்கள் இன்னும் மக்களிடத்தில் உள்ளன. அவை வங்கிக்கு திரும்ப வரும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT