Published : 22 Oct 2023 08:50 AM
Last Updated : 22 Oct 2023 08:50 AM

‘வாக்கரூ ஸ்போர்ட்ஸ்’ ஷூ வாக்கரூ நிறுவனம் அறிமுகம்

சென்னை: இந்தியாவில் உள்ள காலணி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் வாக்கரூ விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தனித்துவமான வடிவமைப்புடன் ‘வாக்கரூ ஸ்போர்ட்ஸ்’ என்னும் புதிய ஷூவை அறிமுகம் செய்துள்ளது.

இதையொட்டி ஒவ்வொருவரிடமும் மறைந்திருக்கும் விளையாட்டு திறமையை வெளிக் கொண்டுவரவும் அதை வளர்த்துக் கொள்ளும் வகையிலும் ‘உள்ளத்தில் துள்ளுதே ஸ்போர்ட்ஸ்' என்ற புதிய பிரச்சார விளம்பரத்தை வாக்கரூ அறிமுகம் செய்துள்ளது.

குறைந்த விலையில் சிறந்த, தரமான மற்றும் இன்றைய காலத்துக்கேற்ற நவநாகரிக காலணிகளை வடிவமைப்பதில் வாக்கரூ நிறுவனம் சிறந்து விளங்குகிறது. ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவர்களின் விளையாட்டுகளுக்கு ஏற்ற ஸ்போர்ட்ஸ் ஷூக்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 50 விதமான டிசைன்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் விலை 699 ரூபாய் முதல் தொடங்குகிறது. ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்கள் அணியும் வகையில் இந்த புதிய ஷூக்களை வாக்கரூ தயாரித்துள்ளது.

இந்த ஸ்போர்ட்ஸ் ஷூக்கள், இன்-சோல் குஷனிங், அதிர்வுகளை தாங்கும் திறன் கொண்ட இவிஏ மிட்சோல், கால்களுக்கு பாதுகாப்பை வழங்கும் ஸ்லிப்-ரெசிஸ்டண்ட், உள்ளங்கால்கள் மற்றும் கால்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் வகையில் காற்று உள்புகும் வகையிலான மெஷ் மற்றும் எளிதாக சுத்தம் செய்யும் வசதி ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் அறிமுகம் குறித்து வாக்கரூ இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நெளஷாத் கூறும்போது, "எங்களின் வாக்கரூ ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் உங்களிடம் மறைந்திருக்கும் விளையாட்டு வீரரை வெளிக்கொண்டு வரும் சக்தி வாய்ந்தவையாகும். இவை நவீன தொழில்நுட்பத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. இவை விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகத்தையும் புத்துணர்ச்சியையும் வழங்கும். குறைந்த விலை கொண்ட இந்த ஷூக்கள் ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை பயணத்தில் சிறந்ததொரு மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x