Published : 11 Jan 2018 10:39 AM
Last Updated : 11 Jan 2018 10:39 AM

2018-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதம்: உலக வங்கி அறிக்கையில் தகவல்

நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. மற்ற வளரும் பொருளாதார நாடுகளை விட இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை கொண்டிருப்பதாகவும் தற்போதைய அரசு வளர்ச்சிக்காக பல முக்கிய சீர்திருத்தங்களை எடுத்து வருவதாகவும் உலக வங்கி கூறியுள்ளது.

சர்வதேச பொருளாதார வாய்ப்புகள் குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், `` 2018-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும். அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி போன்றவவை இருந்தாலும் 2017-18 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவீதத்தை எட்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், சீனாவில் தற்போது பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும். அதே சமயம் அடுத்த நிதியாண்டில் இது, 6.5 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளன என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக வங்கியின் வளர்ச்சி குழும பிரிவின் இயக்குநர் அய்ஹன் கோஸ் கூறியதாவது: அடுத்த பத்தாண்டுகளில் மற்ற மிகப் பெரிய பொருளாதார நாடுகளை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிக மாக இருக்கும். அதனால் குறு கிய கால வளர்ச்சி பற்றி நான் அதி கம் கவனம் செலுத்தவில்லை. இந்தியாவை விரிவாக பார்க்கும் போது அதிக வளர்ச்சியடைவதற் கான வாய்ப்புகள் இருக்கின்றன.

சீனாவோடு ஒப்பிடும்போது தற்போது இந்தியாவின் வளர்ச்சி சற்று குறைவாக இருக்கிறது. ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் படிப்படியாக முன்னேறும். கடந்த மூன்று ஆண்டுகளை பார்க்கும் போது இந்தியாவின் வளர்ச்சி மிக ஆரோக்கியமாக இருக்கிறது.

தற்போது உள்ள வாய்ப்புகளை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதலீடுகளை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் வாராக்கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கும் உற்பத்தியை பெருக்குவதற்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உற்பத்தியை பொறுத்தவரை இந்தியா அதிக வளங்களை கொண்டிருக்கிறது. மேல்நிலைப் படிப்பை முடிப்பதன் அடிப்படையில் இது உறுதியாகிறது. கல்வி மற்றும் சுகாதாரத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, முதலீட்டுக்கான தடைகளை நீக்குவது போன்றவற்றின் மூலம் இந்தியாவின் வளர்ச்சியை மேம் படுத்த முடியும்.

இந்தியா அதிக மனித வளத்தை கொண்டிருக்கிறது. மற்ற பொருளாதார நாடுகளில் இது குறைவு. பெண் ஊழியர்கள் பங்கேற்பு விகிதத்தை அதிகப்படுத்துவது மிக முக்கியமானது. மற்ற வளரும் பொருளாதார நாடுகளை விட இந்தியாவில் பெண் ஊழியர்கள் பங்கேற்பு விகிதம் குறைவாக இருக்கிறது. தற் போது அந்த விகிதத்தை அதிகப்படுத்தினால் மற்ற நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை காண முடியும்.

அதேபோல இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை மிகச் சிக்கலாக இருக்கிறது. தனியார் முதலீடுகளை அதிகப்படுத்துவதன் மூலமே இந்தச் சிக்கலை சரிசெய்ய முடியும்.

ஜிஎஸ்டியை பொறுத்தவரை மத்திய அரசு தீவிரமாக இயங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது வங்கிகளுக்கு மறு மூலதனம் அளிக்க முடிவெடுத்திருப் பது மிக முக்கிய திருப்பமாக உள்ளது. இதன் பலன்கள் விரைவில் தெரியக்கூடும்.

இந்திய பொருளாதாரம் மிகப் பெரியது. அதிக வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் பல்வேறு சவால்களையும் கொண்டிருக்கிறது. தற்போதைய மத்திய அரசு இந்த சவால்களை பற்றி அறிந்திருக்கிறது. அதனால் இதை எப்படி சிறப் பாக எதிர்கொள்ளமுடியும் என் பது தெளிவாக இருக்கும் என்று நம்புகிறேன்.

முந்தைய கணிப்பை விட தற்போதைய கணிப்பில் வளர்ச்சி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்தியா தற்போதுதான் முக்கிய சீர்திருத்தங்களை எடுத்து வருகிறது. சில சீர் திருத்தங்கள் ஒரு நிலையில்லா தன்மையை கொண்டுவருவதறகான வாய்ப்புகளை கொண்டிருக்கின்றன. ஆனால் மற்ற வள ரும் பொருளாதார நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று அய்ஹன் கோஸ் தெரிவித்தார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x