ஆன்லைன் சான்றால் 15,000 ஏற்றுமதியாளர் பயன்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ஆன்லைனில் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநர் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் பயனடைவார்கள் என்று இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (ஃபியோ) தலைவர் ஏ.சக்திவேல் கூறினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கிகளில் இருந்து ஏற்றுமதி மற்றும் பிஆர்சி விவரங்கள் அடிப்படையில் எவ்வித விண்ணப்பங்கள், ஆவணங்களும் இல்லாமல் ஆன்லைனில் ஸ்டேட்டஸ் ஹோல்டர் சான்றிதழ்களை தானாக ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநர் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது.

இது பரிவர்த்தனை செலவு மற்றும் நேரத்தை குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கை. ஆட்டோமேஷன் திசையை நோக்கிச் செல்வதிலும் ஒருபடி முன்னேற்றம் அடைந்துள்ளது. இதன்மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் பயன் அடைவார்கள். இந்த வசதியால், ஏற்றுமதியாளர்கள் 1 முதல் 5 ஸ்டார் அங்கீகாரத்தை பெறுவர். இதற்காகமத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நன்றி என கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in