நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் ரூ.9.57 லட்சம் கோடி நேரடி வரி வசூல்

நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் ரூ.9.57 லட்சம் கோடி நேரடி வரி வசூல்
Updated on
1 min read

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் அக்டோபர் 9-ம் தேதி வரையில் ரூ.9.57 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22 சதவீதம் அதிகம் ஆகும்.

2022-23 நிதி ஆண்டில் ரூ.16.61 லட்சம் கோடி நேரடி வரி வசூலானது. இந்நிலையில், 2023-24 நிதி ஆண்டில் நேரடி வசூல் ரூ.18.23 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரையில் 53 சதவீதம் வசூலாகியுள்ளது.

சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதி ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வரி வசூல் 7.30 சதவீதமும் தனிநபர் வருமான வரி வசூல் 30 சதவீதமும் அதிகரித்துள்ள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in