பங்குச் சந்தையில் 321 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் 321 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

பங்குச் சந்தையில் புதன்கிழமை 321 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 25549 புள்ளிகளானது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 97 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 7624 புள்ளிளைத் தொட்டது.

நீண்ட கால கட்டுமான திட்டப் பணிகளுக்கான கடன் வழங்கும் விகிதத்தில் ரிசர்வ் வங்கி நிபந்தனைகளை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இதனால் வங்கிப் பங்குகள் ஏற்றம் பெற்றன. இதற்கு அடுத்தபடியாக உலோகம், முதன்மை பங்குகள், ஆட்டோமொபைல், எரிவாயு நிறுவனப் பங்குகளும் உயர்ந்தன. ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், வங்கிகள் நீண்ட கால கட்டமைப்புத் திட்டங்களுக்கு அளித்துள்ள கடனுக்கு விலக்கு அளித்தது. இது வங்கிப் பங்கு உயர்வுக்கு வழிவகுத்தது.

ஐசிஐசிஐ வங்கி பங்கு அதிகபட்சமாக 4.70 சதவீதம் உயர்ந்து ரூ. 1,459.05-க்கு விற்பனையானது. ஹிண்டால்கோ 4.19 சதவீதம் உயர்ந்து ரூ. 181.65-க்கும், ஆக்ஸிஸ் வங்கி 3.57 சதவீதம் உயர்ந்து ரூ, 1,965.25-க்கும், டாடா ஸ்டீல் 3.13 சதவீதம் உயர்ந்து ரூ. 542.70-க்கும், ஸ்டெர்லைட் 2.97 சதவீதம் உயர்ந்து ரூ. 295.65-க்கும் விற்பனையானது. அதே சமயம் கெயில் இந்தியா பங்கு 0.96 சதவீதம் சரிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in