ஆவின் ஐஸ்கிரீம்களை விற்பனை செய்ய மொத்த விற்பனையாளர்களுக்கு அழைப்பு @ சேலம்

ஆவின் ஐஸ்கிரீம்களை விற்பனை செய்ய மொத்த விற்பனையாளர்களுக்கு அழைப்பு @ சேலம்
Updated on
1 min read

சேலம்: சேலம் மாவட்டத்தில், ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் விற்பனை செய்வதற்கு மொத்த விற்பனையாளர்கள் வரும் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்று ஆவின் பொது மேலாளர் (பொ) சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஐஸ்கிரீம் வகைகள் பல்வேறு வகையான சுவைகளில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. ஆவின் ஐஸ்கிரீம் வகைகள், பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, ஐஸ்கிரீம் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. வரும் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மேலாளர் (விற்பனை) - 97157 55995, துணை மேலாளர் (விற்பனை) - 94430 26950 என்ற செல்போன் எண்களிலும், சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்,

சித்தனூர், தளவாய்ப்பட்டி, சேலம் மாவட்டம் -636 302 என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 வரையும் தொடர்பு கொள்ளலாம், என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in