Published : 21 Dec 2017 10:20 AM
Last Updated : 21 Dec 2017 10:20 AM

டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தை ஏற்று நடத்த ஏர்டெல் இயக்குநர் குழு ஒப்புதல்

டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தின் செல்போன் சேவையை ஏற்று நடத்த ஏர்டெல் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தின் கூட்டாளியான ஜப்பானின் டோகோமோ நிறுவனம் வெளியேறியது. இதையடுத்து அந்நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய தொகையை டாடா அளித்தது. மேலும் நிறுவத்தின் கடன் பொறுப்புகள் அதிகம் இருந்ததால் இதைத் தொடர்ந்து நடத்த வேண்டாம் என டாடா குழுமம் முடிவு செய்தது. இதையடுத்து தான் அளித்து வந்த வாடிக்கையாளர் சேவையை ஏர்டெல் நிறுவனம் ஏற்று நடத்த அனுமதி அளித்தது. ஏர்டெல் நிறுவனம் இதற்காக எவ்வித தொகையையும் டாடா நிறுவனத்துக்கு அளிக்காது. அதேபோல டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்துக்கு உள்ள கடன் பொறுப்புகளையும் ஏர்டெல் நிறுவனம் ஏற்காது. கடன் பொறுப்பை ஏற்பதில்லை, ரொக்க பரிவர்த்தனையும் இல்லை என்கிற ரீதியில் இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்து கொண்டன.

இதுதொடர்பாக ஏர்டெல் இயக்குநர் குழு கூடி ஆலோசித்தது. அதில் டாடா டெலி சர்வீசஸின் நுகர்வோர் சேவையை தனியே பிரித்து, அதை ஏர்டெல்லுடன் இணைப்பது எனும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதில் ராஜஸ்தான் வட்டார செயல்பாடு மட்டும் பார்தி ஹெக்ஸாகாம் நிறுவன கட்டுப்பாட்டின்கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-17-ம் நிதி ஆண்டில்டாடா டெலி சர்வீசஸின் வருமானம் ரூ.7,366 கோடியாகும். இதே காலகட்டத்தில் ஏர்டெல் வருமானம் ரூ.62,276 கோடியாகும்.

இணைப்பின் முதல் கட்டமாக டாடா டெலி சர்வீசஸ் பங்குதாரர்களுக்கு ஒவ்வொன்றும் ரூ.100 முக மதிப்பு கொண்ட பங்குகளை வைத்திருப்போருக்கு மீண்டும் மாற்றத்தகுந்த பட்டியலிடாத முன்னுரிமை பங்குகள் 500 வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. இது அவரவர் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அளிக்கப்படும்.

ஏர்டெல் நிறுவனம் ரூ 100 முக மதிப்பு கொண்ட பங்குகளுக்கு 10 பட்டியலிடாத பங்குகள், அதா வது முழுவதும் கட்டாயமாக மாற்ற வேண்டிய முன்னுரிமை பங்குகளாக வழங்க உள்ளது. இவை அனைத்தும் டிடிஎஸ்எல் பங்குதாரர்களுக்கு அவரவர் வசம் உள்ள பங்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கப்படும்.

இந்த ஒப்பந்தம் மூலம் 19 தொலைத் தொடர்பு வட்டாரங்களில் டாடா டெலி சர்வீசஸ் 4 கோடி வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த சேவையை இனி ஏர்டெல் தொடரும். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x