நாட்டில் விற்பனையாகும் 40 சதவீத மின்சார வாகனங்கள் தமிழகத்தில் தயாரித்தவை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: மின்சார வாகனங்களை (இவி) அதிக அளவில் தயாரிப்பதில் தமிழகம் முன்னணி மாநிலங்களுள் ஒன்றாக உள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும் மொத்த மின்சார வாகனங்களில் 40 சதவீதம் தமிழகத்திலிருந்து தயாரிக்கப்பட்டவை என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சக வாகன் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட நான்கு சக்கர மின்சார வாகனங்களை தயாரிக்கும் 10 பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. வாகன் வலைதள புள்ளிவிவரத் தில், நடப்பாண்டு ஜனவரியில் இருந்து செப்டம்பர் 20 வரையில் நாடு முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) பதிவு செய்யப்பட்ட மின்சார வாகன எண்ணிக்கை 10,44,600-ஆக உள்ளது.

இதில் தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் இருந்து மட்டும் பதிவான மின் வாகனங்களின் எண்ணிக்கை 4,14,802-ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-க்குள் மின் வாகன தயாரிப் புக்காக ரூ.50,000 கோடி தமிழகத்தில் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2030-க்குள் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து வகையான மின்சார வாகனங்களிலும் 30 சதவீத பங்களிப்பினை வழங்க தமிழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in