Published : 05 Dec 2017 10:12 AM
Last Updated : 05 Dec 2017 10:12 AM

“கவலைப்படத் தேவையில்லை’’: இன்ஃபோசிஸ் புதிய சிஇஓ சலீல் பரேக் கருத்து

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சலீல் பரேக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை திரும்பவும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவதில் பரேக்கிற்கு பல சவால்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

53 வயதாகும் பரேக், கேப்ஜெமினி நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவர். கேப்ஜெமினி நிறுவனத்தின் இயக்கு நர் குழுவில் இவரது ஐந்து ஆண்டுகால நியமனம் 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் முடிகிறது.

``பரேக், நிறுவனர் நாராயணமூர்த்தியுடன், பொதுவாக சிறந்த உறவு முறையை கடைபிடிப்பார். தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவும், வளர்ச்சி பாதைக்கான சிறந்த முடிவுகளை எடுப்பார். குறைந்த லாபம் கொண்ட அயல்பணி தொழில்தவிர அடுத்த கட்டமாக அதிக லாபம் கொண்ட மின்னணு சேவை துறை தொழிலுக்கு மாறுவதற்கு போராட்டங்களை நிறுவனம் சந்தித்து வருகிறது. சலீல், ஐடி சேவை துறையில் வலுவான அனுபவம் கொண்டவர்,’’ என்று தற்காலிக தலைவர் நந்தன் நிலகேணி கூறியுள்ளார். ``நிறுவனத்தின் பணி கலாசாரத்தோடு தன்னை இணைத்துக் கொள்வார். அதே நேரத்தில் தேவையான மாற்றங்களையும் அளிப்பார் என்றும் கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தொழில்துறை அமைப்பான நாஸ்காம் நடத்திய நிகழ்ச்சியில் பரீக் உரையாற்றினார். அப்போது ஐடி துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்து உரையாற்றுகையில், அமைதியாக இருப்போம், கவலைப்பட தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.

கேப் ஜெமினி பணி குறித்து தனது லிங்கிட் இன் தளத்தில் குறிப்பிடும்போது பிசினஸ் மேனேஜர் என்றே பரீக் குறிப்பிட்டுள்ளார். யர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் பார்ட்னராக இருந்துள்ளார். அதற்கு முன்னர் மும்பையில் ஒரு சிறிய சேமிப்பு கிடங்கு நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள் அல்லாத இரண்டாவது தலைமைச் செயல் அதிகாரியாக பரீக் பெறுப்பேற்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x