நிர்மல் ஜெயின் - இவரைத் தெரியுமா?

நிர்மல் ஜெயின் - இவரைத் தெரியுமா?
Updated on
1 min read

$ இந்தியா இன்ஃபோலைன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்.

$ 1989-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து அங்கு வேளாண் வர்த்தக பிரிவைக் கையாண்டு, இப்பிரிவு ஏற்றுமதியில் ஈடுபட்டு லாபகரமானதாக இயங்கும்படி செய்தார்.

$ 1994-ம் ஆண்டு மோதிலால் ஆஸ்வால், ராம்தேவ் அகர்வால் ஆகியோருடன் இிணைந்து பங்குச் சந்தை ஆராய்ச்சி பிரிவை ``இன்குயர்’’ என்ற பெயரில் தொடங்கினார்.

$ 1995-ம் ஆண்டு புரோபிடி ஆய்வு மற்றும் சேவை நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் இந்த நிறுவனம்தான் இந்தியா இன்ஃபோலைன் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

$ 2006-ம் ஆண்டு இந்தியா இன்ஃபோலைன் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினார்.

$ 3 வெவ்வேறு தொழில் பிரிவுகளைச் சேர்ந்த 20 நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

$ சார்டர்ட் அக்கவுண்டன்ட் மற்றும் காஸ்ட் அக்கவுண்டண்ட் பட்டதாரியான இவர் ஆமதாபாத் ஐஐஎம்-மில் நிர்வாகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். நிதி நிர்வாகத்தில் மிகவும் அவசியமான மூன்று பட்டங்களையும் 23 வயதிலேயே முடித்தவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in