Published : 15 Dec 2017 10:10 AM
Last Updated : 15 Dec 2017 10:10 AM

இவரைத் தெரியுமா?- எரிக் எய்ஷ்மான்

சர்வதேச அளவில் முன்னணி இண்டர்நெட் விளம்பர நிறுவனமான கிரிட்யோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டில் ஜனவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2013-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இதே நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி மற்றும் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

ஸ்விஸ் பெடரல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுநிலை பட்டமும் கெல்லாக் பிஸினஸ் பள்ளியில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

லிவிங் சோஷியல் நிறுவனத்தில் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

மெக்கென்ஸி நிறுவனத்தில் உத்திகள் வகுக்கும் பிரிவின் மூத்த ஆலோசகராக இருந்தவர்.

ரோஸட்டா ஸ்டோன் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x