

$ ஐடிஎப்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2012-ம் ஆண்டு இந்நிறுவனத்தில் துணை நிர்வாக இயக்குநராக சேர்ந்த இவர் கடந்த ஆண்டு தலைமைப் பதவிக்கு உயர்ந்தார்.
$ இதற்கு முன் அமெரிக்காவில் உள்ள கிரெடிட் சூயெஸ் ஃபர்ஸ்ட் பாஸ்டன் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். முதலீட்டு வங்கி, பங்குச் சந்தை, பல்வேறு நிதி நிர்வாகம் ஆகியவற்றில் இவருக்கு மிகுந்த அனுபவம் உண்டு.
$ சர்வதேச நிதி நிர்வாகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மிக்கவர். சிட்டி வங்கியிலும் பணியாற்றியுள்ளார். எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.
$ மும்பை பல்கலைக் கழகத்தில் வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்று சார்டர்ட் அக்கவுண்டன்டாக பணியைத் தொடங்கினார். பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் உள்ள வார்டன் நிர்வாகவியல் மையத்தில் முதுகலை நிர்வாகவியல் பட்டம் பெற்றவர்.