Published : 14 Dec 2017 10:55 AM
Last Updated : 14 Dec 2017 10:55 AM

`மொபைல் செயலி மூலம் மருந்துகள் விற்பனை’; கிளினிக்கல்ஸ் நிறுவன சிஇஓ ராஜ் குன்னத் தகவல்

மொபைல் அப்ளிகேஷன் (செயலி) மூலம் மருந்துகளை விற்பனை செய்யும் முறையை சென்னையில் கிளினிக்கல்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.மற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களை போலவே கிளினிக்கல்ஸ் நிறுவனம் வீட்டிற்கே பொருட்களை விநியோகம் செய்ய இருக்கிறது. அதாவது மருந்துகளையும் லேப் டெஸ்ட்டையும் வீட்டிற்கே வந்து கொண்டு வந்து சேர்க்கும் முறையை கிளினிக்கல்ஸ் நிறுவனம் தொடங்கியிருக்கிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராஜ் குன்னத் கூறியதாவது: தற்போதைய காலகட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்குச் சென்றால் பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் உள்ளது. அதுமட்டுமல்லாமல் மருந்துகளை வாங்குவதற்கும் ஒவ்வொரு மருந்துகடைக்கு அலைய வேண்டியிருக்கிறது. இதைப் போக்குவதற்கே கிளினிக்கல்ஸ் மொபைல் அப்ளிகேஷனை தொடங்கியிருக்கிறோம்.

இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் மருந்துப் பொருட்களை ஆர்டர் செய்ய முடியும். மேலும் இதில் சிறப்பம்சமாக நீங்கள் பதிவிடும் மருந்துகள் எந்தெந்த கடைகளில் எவ்வளவு விலைகளில் விற்கப்படுகிறது, எந்தக் கடை இந்த மருந்துக்கு தள்ளுபடி வழங்குகிறது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப ஆர்டர் செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் மருத்துவர் எழுதிய மருந்து சீட்டை நீங்கள் போட்டோ எடுத்து அதை கிளினிக்கல்ஸ் அப்ளிகேஷனில் பதிவேற்றியும் மருந்துகளை பெற முடியும். இதற்காக வாடிக்கையாளர் சேவை மையத்தையும் தொடங்கியிருக்கிறோம்.

இதற்காக 100 மருந்து கடைகள் மற்றும் மருத்துவ பரிசோதனை மையங்களுடன் கூட்டு வைத்திருக்கிறோம். மருத்துவ பரிசோதனையை பொறுத்தவரை, நீங்கள் என்ன மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென்று பதிவிட்டால் உங்கள் வீட்டிற்கே வந்து அந்த பரிசோதனையை மேற்கொள்வார்கள்.

தற்போது சென்னை முழுவதும் இந்த சேவையை அளிக்க இருக்கிறோம். எங்கிருந்து ஆர்டர் செய்தாலும் 4 மணி நேரத்துகுள்ளே மருந்துகளை டெலி வரி செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று ராஜ் குன்னத் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x