

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (வெள்ளிக்கிழமை) 10 காசுகள் உயர்ந்து 63.98 ரூபாயாக ஆக இருந்தது.
வங்கிகளும், ஏற்றுமதி நிறுவனங்களும் அமெரிக்க டாலரை அதிகஅளவில் விற்பனை செய்ததால் டாலர் மதிப்பு சரிந்து, பல்வேறு நாடுகளின் கரன்சி மதிப்பு உயர்ந்தது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று உயர்வு கண்டது. இன்று காலை நேர வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து 63.98 ரூபாயாக இருந்தது.