Published : 05 Dec 2017 10:18 AM
Last Updated : 05 Dec 2017 10:18 AM

இவரைத் தெரியுமா? - எரிக் எகுடென்

எரிக்சன் குழுமத்தின் தலைமைச் தொழில்நுட்ப அதிகாரி. 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் உள்ளார்.

2010-ம் ஆண்டிலிருந்து எரிக்சன் நிறுவனத்தின் அமெரிக்கா செயல்பாடுகளுக்கான துணைத் தலைவர் மற்றும் நிறுவனத்தின் தொழில்நுட்ப உத்திகள், ஆராய்ச்சிகளுக்கான தலைவராக செயல்பட்டவர்.

1993-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தில் இணைந்தவர். பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

தொலைத் தொடர்பு துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். நெட்வொர்க் உருவாக்கம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வல்லுநர்.

ஸ்வீடனில் உள்ள ராயல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் உயர்கல்வி முடித்துள்ளார்.

சர்வதேச அளவில் மொபைல் மென்பொருள் விரிவாக்கம், கிளவுட் விநியோகம், அடுத்த தலைமுறை அலைவரிசை போன்ற ஆராய்ச்சிகளில் வல்லுநர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x