

டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாயை தொட்டது. இந்த தொகையை தொடும் முதல் இந்திய நிறுவனம் டிசிஎஸ் ஆகும். புதன் கிழமை வர்த்தகத்தின் 52 வார உச்சபட்ச விலையை தொட்டது டிசிஎஸ். முடிவில் 2.21 சதவீதம் உயர்ந்து 2,586 ரூபாயில் முடிவடைந்தது. இதன்படி பார்க்கும்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5,06,703 கோடி ரூபாயாக இருக்கிறது.
டிசிஎஸ்-க்கு அடுத்து ஓஎன்ஜிசியின் சந்தை மதிப்பு ரூ.3.5 லட்சம் கோடியாகவும், ரிலையன்ஸ் ரூ.3.3 லட்சம் கோடியாகவும் இருக்கிறது. டிசிஎஸ்க்கு அடுத்து இருக்கும் 4 நிறுவனங்களின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் கோடி. இன்போசிஸ் ரூ.1.9 லட்சம் கோடி, விப்ரோ ரூ. 1.39 லட்சம் கோடி, ஹெச்சிஎல் ரூ. 1.07 லட்சம் கோடி மற்றும் டெக் மஹிந்திரா 45,000 கோடி ருபாயாக இருக்கிறது.