

சென்னை: இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா வங்கி 251 புதிய கோல்டு லோன் ஷாப்களை நாடு முழுவதும் தொடங்குகிறது.
வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட வகையில் விரைந்த சேவையை வழங்குவதோடு, வாடிக்கையாளர்களின் தனி உரிமையையும் கோல்டு லோன் ஷாப் உறுதி செய்கிறது. இதன்மூலம் நாடு முழுவதும் தற்போது மொத்தம் 1,238 கோல்டு லோன் ஷாப்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 38 புதிய கோல்டு லோன் ஷாப்கள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு கோல்டு லோன் ஷாப்பிலும் ஒரு பொறுப்பு அதிகாரி இருப்பார் அவருடன் சேர்ந்து, அனைத்து வேலை நாட்களிலும் தடையில்லாத சேவை வழங்கும் வகையில் குறைந்த பட்சம் 2 நகை மதிப்பீட்டாளர்கள் இருப்பார்கள். மேலும் கடன் வழங்குவதற்கான விருப்புரிமை அதிகாரத்தை அலுவலக பொறுப்பு அதிகாரி கொண்டிருப்பார். இதனால் கடன் இசைவாணை குறைந்த நேரத்தில் வழங்கப்பட்டு, கடன் நடைமுறை துரிதமாக மேற்கொள்ளப்படும்.
இது குறித்து பாங்க் ஆஃப் பரோடாவின் எக்ஸிக்யூடிவ் டைரக்டர் அஜய் குரானா கூறும்போது, “மேம்பட்ட கடன் தொகை வரையறைகளுடன் ரூ.3 லட்சம் வரையிலான கடன்களுக்கு எந்த ஒரு செயல்முறைக் கட்டணமும் இல்லை. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் கோல்டு லோன்கள் வழங்கப்படும். அதே சமயம் அடமானம் வைக்கும் தங்கத்துக்கான மிகச் சிறந்த மதிப்பை வாடிக்கையாளர்கள் பெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்” என்றார்.
இந்த 251 புதிய கோல்ட் லோன்ஷாப்கள் ஆந்திரா, குஜராத், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம், மகாராஷ்ட்ரா, ஒடிசா, பஞ்சாப் - ஹரியானா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளன.