23 வயது இளைஞரை தலைமை கேமிங் அதிகாரியாக நியமித்த iQOO: மாதம் ரூ.10 லட்சம் சம்பளம்!

23 வயது இளைஞரை தலைமை கேமிங் அதிகாரியாக நியமித்த iQOO: மாதம் ரூ.10 லட்சம் சம்பளம்!
Updated on
1 min read

சென்னை: 23 வயது இளைஞரான ஸ்வேதங்க் பாண்டேவை தலைமை கேமிங் அதிகாரியாக நியமித்துள்ளது iQOO நிறுவனம். ஆறுமாத காலத்துக்கு மாதம் ரூ.10 லட்சம் சம்பளம் என்ற அடிப்படையில் அவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சீன நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். ஸ்மார்ட்போன், சார்ஜர், இயர் போன், டேட்டா கேபிள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. இந்த சூழலில் தங்கள் பயனர்களுக்கு அபாரமான பயனர் அனுபவத்தை வழங்கும் நோக்கில் தலைமை கேமிங் அதிகாரியை (சிஜிஓ) நியமித்துள்ளது.

சிஜிஓ பொறுப்புக்கான தேடல் படலம் சுமார் 3 மாதம் நடந்துள்ளது. சுமார் 60 ஆயிரம் விண்ணப்பங்கள் இந்த பணிக்காக பெறப்பட்டுள்ளது. கேமிங் என்கேஜ்மென்ட் மற்றும் அனுபவத்தை மறுவரையறை செய்வதன் மூலம் நிறுவனத்துக்கு உதவுவது தான் சிஜிஓ-வின் பிரதான பணி.

ஸ்வேதங்க் பாண்டே, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர். கேமிங் சார்ந்த திறன் மற்றும் தகவல் தொடர்புத் திறன்கள் போன்ற காரணத்துக்காக அவர் இந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பொறுப்பில் நியமிக்கப்படும் முதல் நபர் அவர் தான். தனது பணியை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in