

கிராமப்புற இந்தியாவில் வளர்ச்சியை அதிகரிக்க நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். விவசாயத்தில் முதலீட்டை அதிகரிப்பது, கிராமங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டுமான விஷயத்தில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது என்றார்.
அதற்காக நாம் இதுவரை எதுவுமே செய்யவில்லை என்று சொல்லவில்லை. நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறது என்றார். விவசாயத் துக்குத் தேவையான முதலீட்டு விஷயத்தில் நாம் மிகவும் பின் தங்கி இருக்கிறோம் என்று புதுடெல்லியில் நடந்த நபார்ட் விழாவில் ஜேட்லி தெரிவித்தார்.
இன்னும் சில ஆண்டுகளில் அனைவருக்கும் வீட்டு வசதியை கொடுக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. மேலும் அனைவருக்கும் மின்சாரம், தண்ணீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த அரசு முயற்சித்து வருகிறது என்றார்.