Published : 31 Dec 2017 10:42 AM
Last Updated : 31 Dec 2017 10:42 AM

பாரம்பரியத்தை இளைஞர்களிடையே கொண்டு செல்லும் வகையில் ரூ.500-க்கு வேட்டி - சட்டை ஜோடி அறிமுகம்: ராம்ராஜ் காட்டன் நிறுவனம் அறிவிப்பு

ஜன.1 முதல் 7-ம் தேதி வரை ராம்ராஜ் வேட்டி வாரத்தையொட்டி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக திருப்பூர் ராம்ராஜ் நிறுவன வளாகத்தில் ரூ.500 மதிப்பில் வேட்டி, சட்டை ஜோடியை நிறுவன உரிமையாளர் கே.ஆர். நாகராஜன் நேற்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மூலமாக ஏற்பட்ட மறுமலர்ச்சியே, சமுதாயத்தில் நீடித்த மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. வேட்டி அணிவது பண்பாட்டின் அடையாளம் என்பதை உணர்த்தி, அத்தகைய பாரம்பரிய வேட்டியை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே கொண்டு சேர்க்கவே, ஜன.1முதல் 7-ம் தேதி வரை வேட்டி வாரத்தை கொண்டாடுகிறோம்.

கோ-ஆப்டெக்ஸில் சகாயம் ஐ.ஏ.எஸ். இருந்தபோது, வேட்டி தினத்தை தொடங்கி வைத்தார். அவர் ஒரு நாள் செய்ததை, ஒரு வாரம் செய்தால் நெசவாளர்களுக்கு பயன் அளிக்கும் என்பதால், கடந்த ஆண்டு முதல் வேட்டி வாரத்தை ராம்ராஜ் நிறுவனம் கொண்டாடி வருகிறது.

சிறுவயதில் கடையில் விற்பனை பிரதிநிதியாக இருந்தேன். அப்போது, வேட்டி நெய்து தரும் நெசவாளர்கள் சட்டைகூட இன்றி, வெற்று உடம்புடன் கூலிக்காக கடையில் நாள் முழுவதும் காத்திருப்பார்கள். அவர்களது வாழ்வை மாற்ற வேண்டுமென ராம்ராஜ் நிறுவனத்தை ஆரம்பித்தேன். அவர்களுக்குத் தேவையான விஷயங்களை செய்து கொடுத்து, இன்றைக்கு 35 ஆண்டுகளை கடந்து நெசவாளர்களின் வாழ்வை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம். தமிழகம் முழுவதும் ஜன.1 முதல் 7-ம் தேதி வரை வேட்டி வாரத்தையொட்டி, ரூ.500-க்கு வேட்டி, சட்டை ஜோடியை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் காக்க வேட்டி வாரம் கொண்டாடுகிறோம். இதனால், நெசவாளர்களுக்கு வேலை கிடைப்பதுடன், வாழ்வும் உயர்கிறது. வேட்டி வாரத்தையொட்டி, நடப்பு ஆண்டில் 7 லட்சம் பேருக்கு ரூ.500-க்கு வேட்டி - சட்டை ஜோடி தயார் செய்துள்ளோம். லாப நோக்கத்தை கடந்து, பாரம்பரியத்தை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமே, வேட்டி வாரம் கொண்டாட முக்கியக் காரணம். மாற்றங்களை இளைஞர்கள் விரும்புபவர்கள். நிச்சயம் வரவேற்பார்கள்.

தமிழகத்திலுள்ள 80-க்கும் மேற்பட்ட ராம்ராஜ் ஷோரூம்களிலும், 3000-க்கும் மேற்பட்ட டீலர்களிடமும் ரூ.500 மதிப்பிலான வேட்டி - சட்டை ஜோடி நாளை முதல் (ஜன.1) விற்பனைக்கு தயாராக இருக்கும் என்றார். நிகழ்ச்சியில் நிறுவனத்தின் ஊழியர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x