

பின்லாந்து நாட்டை சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் 7.4 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது.
இந்த ஒப்பந்தம் இந்த மாதத்துக்குள் இறுதி பெறும் என்று நோக்கியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. வருமான வரி தொடர்பான சர்ச்சைக்கு இடையிலும் இந்த ஒப்பந்தம் இறுதியாவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சீனாவில் இந்த ஒப்பந்தம் இறுதி பெற்றது.
வருமான வரி தொடர்பான சர்ச்சையில் நோக்கியாவின் சொத்துகளை வருமான வரித்துறை கடந்த வருடம் முடக்கியது. அடுத்த 10 நாட்களில் இந்த பிரச்சினைக்கு நோக்கியா தீர்வு கண்டாக வேண்டும்.
வருமான வரித்துறை மட்டுமல்லாமல் தமிழ்நாடு விற்பனை வரித்துறையுடனும் நோக்கியாவுக்கு பிரச்சினை இருக்கிறது.
சமீபத்தில் 6,600 நிரந்தர பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தியது. அதேபோல, பயிற்சி பணியாளர் களை வேலைக்கு எடுக்க மாட்டோம் என்றும் சமீபத்தில் அறிவித்தது.
இந்த நிலையில் தங்கள் வசம் இருக்கும் பணியாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பத்திரமாக இருக்கும் என்றும், நோக்கியா எவ்வாறு உங்கள் தகவல்களை பாதுகாத்ததோ அதேபோல நாங்களும் பாதுகாப்போம் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
நிறுவனம் விற்கப்பட்டாலும் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்று மைக்ரோசாப்ட் அறிக்கை தெரிவிக்கிறது.