

புதுடெல்லி: எஸ் &பி குளோபல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொருளாதார வளர்ச்சியில் தற்போது அமெரிக்கா 26 டிரில்லியன் டாலருடன் முதலிடத்திலும், சீனா 19 டிரில்லியன் டாலருடன் 2-வது இடம், ஜப்பான் 4.4 டிரில்லியன் டாலருடன் 3 வது இடம், ஜெர்மனி 4.3 டிரில்லியன் டாலருடன் 4-வது இடம், இந்தியா 3.7 டிரில்லியன் டாலருடன் 5-வது இடத்திலும் உள்ளன.
தற்போது சர்வதேச அளவில் காணப்படும் சுணக்கமான சூழல் உலக நாடுகளின் வேகத்துக்கு தடைக்கல்லாக மாறியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் வட்டி விகிதம் அதிகமாக இருப்பது பிரச்சினையின் வேகத்தை தீவிரமாக்கியுள்ளது. இதுபோன்ற இடர்பாடுகளை அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை சரியான முறையில் அணுகி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
கடந்த 2008-ம் ஆண்டு 5.36 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் தற்போது 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எனவே, தொழில் நடவடிக்கைகளை ஊக்குவித்து அவற்றின் பங்கை அதிகரிக்கும் வகையில் கொள்கைகளை வகுப்பதுடன், உலக சந்தையில் போட்டியிடும் அளவில் இந்தியாவின் தனித்தன்மையை அதிகரிக்க வேண்டும்.
ஆண்டுக்கு சராசரி 6.7 சதவீத பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்கவேண்டும். அப்போதுதான் இந்தியாவின் 6.7 டிரில்லியன் டாலர் கனவு நனவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.