டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் சென்னையில் அறிமுகம்

டிரையம்ப் ஸ்பீடு 400 மோட்டார் சைக்கிள்கள் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டன.
டிரையம்ப் ஸ்பீடு 400 மோட்டார் சைக்கிள்கள் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டன.
Updated on
1 min read

சென்னை: டிரையம்ப் ஸ்பீடு 400 மோட்டார் சைக்கிள்கள் முதன்முறையாக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டன. சென்னையில் உள்ள கிவ்ராஜ் டீலர்ஷிப் அரங்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்களை பார்க்க வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

இதன்படி டிரையம்ப் ஸ்பீட் 400 மற்றும் ஸ்க்ராம்லர் 400 எக்ஸ் பைக்குகள் வாடிக்கையாளிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன. சென்னையில் நடந்த அறிமுக நிகழ்ச்சியில் பைக்கை முன்பதிவு செய்தவர்கள் மற்றும் டெஸ்ட் டிரைவ் செய்தவர்கள் என ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

மேலும் இந்த மோட்டார் சைக்கிள்களின் சிறந்த திறன், அதிநவீன தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து வாடிக்கையாளர்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ப்ரோ பைக்கிங் தலைவர் சுமீத் நரங், இந்த நிகழ்வு இந்திய மோட்டார் சைக்கிள் துறைக்கு முக்கியமான நாளாகும். வாடிக்கையாளர்களுக்கு திருப்தி ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள்களை வழங்க முடிவு செய்துள்ளோம். ஆர்வம் உள்ள ரைடர்களை வளர்ப்பதற்கும் இது முதல் படியாகும்.

மேலும் புதிய வாடிக்கையாளர்களுக்கு 2 வருட வரம்பற்ற மைலேஜ் வாரண்டி மற்றும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டியுடன் 16 ஆயிரம் கிமீ சேவை இடைவெளி கிடைக்கும். பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் புதிய சக்கன் ஆலையில் தயாரிக்கும் ஸ்பீடு 400 சென்னையில் உள்ள டிரையம்ப் டீலர்ஷிப்பில் ரூ. 2.33 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். ஸ்பீடு 400-க்கான முன்பதிவுகள் தொடர்ந்து நடைபெறும்.

ஆர்வம் உள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வதன் மூலம் முன்னுரிமை பட்டியலில் இடம் பெறலாம். மேலும் விவரங்களுக்கு www.triumphmotorcyclesindia.com/booking என்ற இணையதள முகவரியிலும் அருகில் உள்ள டீலர்ஷிப்களையும் அணுகலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in