Published : 12 Nov 2017 12:34 PM
Last Updated : 12 Nov 2017 12:34 PM

சுகுணா ஃபுட்ஸ் ஜிபி சுந்தரராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக டை (The Indus Entrepreneurs) அமைப்பு ஆண்டு தோறும் விருதுகளை வழங்கிவருகிறது. இந்த அமைப்பின் 10-ம் ஆண்டு விழா நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் சென்னையில் நடந்தது. விருது வழங்குவது மட்டுமல்லாமல் தொழில் முனைவோர்கள், ஆலோசகர்கள் பலர் தங்களின் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

வெள்ளிக்கிழமை இரவு நடந்த டைகான் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பி. சுந்தரராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இது தவிர மூன்று பிரிவுகளில் விருதுகளும் வழங்கப்பட்டன.

சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனமாக பிளிண்டோ லேர்னிங் சொல்யூஷன்ஸ் (Flinto Learning Solutions) நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. சிறப்பாக விரிவாக்கம் செய்யப்பட்ட நிறுவனமாக இந்த்ரி ஆக்சஸ் (Inthree Access )தேர்வு செய்யப்பட்டது. அதேபோல நீண்டகாலமாக நீடித்து வரும் நிறுவனமாக இந்தியன் டெரைன் (Indian Terrain) தேர்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு பிரிவுகளுக்கும் பல நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இதில் இருந்து 5 நிறுவனங்கள் இறுதி கட்ட பரிந்துரைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு நடுவர் குழு சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்தது.

இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் பாண்டியராஜன், தோஹா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன், பிரமல் குழுமத்தின் அஜய் பிரமல், ஹட்சன் நிறுவனத்தின் ஆர்.சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x