

சென்னை: சென்னையைச் சேர்ந்த எம்ஆர்எஃப் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
உயர் செயல்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘ஸ்டீல்பிரேஸ்’ டயரை அறிமுகப்படுத்தி உள்ளோம். விரிவான சோதனைகளின் அடிப்படையில் ஆர் & டி குழு கடுமையான உழைப்புக்குப் பிறகு புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இந்த டயரை உருவாக்கியுள்ளது.
கூடுதலான கிரிப், விரைவான அதிர்வுகளை தாங்கும் திறன், ஸ்விஃப்ட் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ், நிலைத்தன்மை உள்ளிட்ட கூடுதல் அம்சங்கள் இப்புதிய டயரில் இடம் பெற்றுள்ளன. அதிவேக பந்தயத்துக்கு ஏற்ப, கார்னரிங் செய்வதற்கு உகந்த வகையில் இந்த டயர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எம்ஆர்எஃப் தெரிவித்துள்ளது.