ஓரடி முதல் ஐந்தடி வரை பல்வேறு வடிவங்களில் பழநியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரம்

ஓரடி முதல் ஐந்தடி வரை பல்வேறு வடிவங்களில் பழநியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரம்
Updated on
1 min read

பழநி: விநாயகர் சதுர்த்திக்காக பழநி யில் சிலைகள் தயாரிப்புப் பணியில் குஜராத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப் படுகிறது. இதை முன்னிட்டு பொது இடங்கள், கோயில்களின் முன் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவது வழக்கம். பின் ஊர்வலமாகக் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படும். ஆண்டுதோறும் பழநியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வட மாநிலத்தை சேர்ந்தோர் விநாயகர் சிலைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு செப்.18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பழநியில் விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணியில் குஜராத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக எளிதில் கரையக்கூடிய பேப்பர் கூழ், கிழங்கு மாவு போன்ற மூலப் பொருட்களைக் கொண்டு சிலைகளைத் தயாரிக்கின்றனர்.

ஒரு அடி முதல் 5 அடி வரை பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு அடி சிலை ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், "இன்னும் ஒரு மாதமே இருப்பதால் சிலை தயாரிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். சிறு வியா பாரிகள் எங்களிடம் மொத்தமாக வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர். இங்கிருந்து வெளியூர்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகிறோம். மூலப்பொருட்கள் விலை உயர்வால் சிலைகள் விலையும் உயர்ந்துள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in