

சென்னை: சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இணை நிர்வாக இயக்குநர் ராமன் மிட்டல் கூறியதாவது: அதிக வலிமை வாய்ந்த டிராக்டர்களுக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு பெருகியுள்ளது. அதனை எடுத்துக்காட்டும் விதமாகவே, கடந்த ஜூலை மாதத்தில் 10,683 சோனாலிகா டிராக்டர்கள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் விற்பனையில் நிறுவனம் 14 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது, இத்துறையின் மதிப்பீடான 6.4 சதவீதத்தைக் காட்டிலும் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில் மட்டும் நிறுவனத்தின் டிராக்டர் விற்பனையானது 50,000-ஐ கடந்துள்ளது. இதற்கு, விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பிராந்திய ரீதியில் அணுகி அதற்கேற்ற தீர்வுகளை நிறுவனம் உருவாக்கி வருவதே முக்கிய காரணம். விவசாயிகளை மகிழ்வுடன் வைத்திருப்பதற்கான பிரதான நோக்கத்துடன், அதற்கேற்ற புத்தாக்க முயற்சிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.