

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் யு.கே. சின்ஹா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பாக நிதி அமைச்சரை சின்ஹா சந்தித்து பேசியது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இருவரது ஆலோசனை விவரம் வெளியாகவில்லை. எதிர்வரும் பட்ஜெட்டில் செபி எதிர்பார்க்கும் விஷயங்கள் குறித்த பட்டியல் ஏற்கெனவே நிதி அமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர நிதி முதலீடுகளை அதிகரிக்கும் விஷயமாக வரி விகிதத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை செபி முன் வைத்துள்ளது.