Last Updated : 17 Nov, 2017 03:33 PM

 

Published : 17 Nov 2017 03:33 PM
Last Updated : 17 Nov 2017 03:33 PM

பார்தி ஏர்டெல் - கார்பன் மொபைல்ஸ் கூட்டுறவில் குறைந்த விலை 4ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

இந்தியாவின் பெரிய தொலைத்தொடர்பு நிறுவமனமான பார்தி ஏர்டெல் கார்பன் மொபைல்ஸுடன் கூட்டுறவு மேற்கொண்டு இரண்டு புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

ஆண்ட்ராய்ட் அடிப்படையிலான ‘ஏ1 இந்தியன், மற்றும் ஏ41 பவர்’ ஆகிய இரண்டு 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன.

இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ. 1,799 (ரூ.4,390 என்ற எம்.ஆர்.பி.க்கு எதிராக) மற்றும் ரூ. 1,849 (ரூ.4,290 என்ற எம்.ஆர்.பி.விலைக்கு எதிராக)

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஏர்டெல்லின் மாதாந்திர ரூ.169 ரீசார்ஜ் பேக்கின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் மொபைல் போன் உற்பத்தியாளர்கள் சிலருடன் கைகோர்த்து குறைந்த விலை 4ஜி ஸ்மார்ட்போன்களைக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறைந்த விலை ஸ்மார்ட் போன் மற்றும் வாய்ஸ் மற்றும் டேட்டா திட்டங்களுடன் சில சலுகைகளை அறிவித்து வருகின்றன.

ஜியோ போனுக்குப் போட்டியாக பார்தி ஏர்டெல் செல்கான் மற்றும் கார்பன் மொபைல் ஆகிய செல்போன் உற்பத்தி நிறுவனங்களுடன் கைகோர்த்து குறைந்த விலை 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

வோடபோன் சேவை நிறுவனமும் மைக்ரோமேக்ஸ் மொபைல் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து ரூ.999-க்கு ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்தது குறிப்ப்பிடத்தக்கது.

தற்போது கார்பன் மொபைல்ஸுடன் இணைந்து ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ஏ1 இந்தியன் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3,299 மற்றும் ஏ41 பவர் ஸ்மார்ட் போன்களுக்கு ரூ.3,349-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

ரூ.169 மாதாந்திர ரீசார்ஜ் 36 மாதங்களுக்கு தொடர்ச்சியாகச் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு முதல் 18 மாதங்களுக்குப் பிறகு ரூ.500-ம் 36 மாதங்களுக்குப் பிறகு ரூ.1,000-மும் திருப்பி அளிக்கப்படும். இதன் மூலம் மொத்த ரொக்கப் பயன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,500 ஆகும்.

ரூ.169 ரீசார்ஜ் திட்டத்தில் இணைய வாடிக்கையாளர்கள் விரும்பவில்லை எனில், எந்தவிதமான ரீசார்ஜ் திட்டத்தையும் தெரிவு செய்துகொள்ளலாம்.

ஆனால் மற்ற ரீசார்ஜ் திட்டங்களில் ரொக்கம் திருப்பி அளிக்கப்படும் சலுகையைப் பெற வேண்டுமெனில் 18 மாதங்களில் ரூ.3,000த்துக்கு ரீசார்ஜ் செய்வது அவசியமாகும் (முதல் ரீஃபண்ட் ரூ.500க்கு) பிறகு அடுத்த 18 மாதங்களில் மேலும் ரூ.3,000-த்துக்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.1000 ரீஃபண்டையும் பெறலாம் என்று ஏர்டெல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் எந்த ரீசார்ஜ் திட்டத்தில் இணைந்தாலும் ரூ.1,500 ரொக்கப் பயன் வாடிக்கையாளர்களுக்கு உண்டு.

ஏர்டெல்-கார்பன் கூட்டுறவில் உள்ள அனைத்து போன்களும் அமேசான் இந்தியாவில் கிடைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x