Published : 30 Nov 2017 10:09 AM
Last Updated : 30 Nov 2017 10:09 AM

பிட்காயின் மதிப்பு 10,000 டாலரை எட்டியது

பிட்காயின் எனப்படும் விர்ச்சுவல் பணத்தின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 10,831.75 டாலரை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாகவே பிட்காயின் மதிப்பு ஏற்றத்தை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 12.30 மணிக்கு ஒரு பிட்காயின் மதிப்பு 10,831.75 டாலரை தொட்டது. இதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் ஒரு பிட்காயின் மதிப்பு 9,830 டாலராக இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு பிட்காயின் மதிப்பு 1,000 டாலர் என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிக பட்ச உயர்வை எட்டியிருக்கிறது.

பிட்காயினுடைய சந்தை மதிப்பு 20,000 கோடி டாலருக்கும் குறைவாகவே இருக்கும். 2,00,000 கோடி டாலர் மதிப்புள்ள நிதிச்சந்தையில் ஏதாவது சிறிய மாறுதல் ஏற்பட்டால் கூட பிட்காயினின் மதிப்பு அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை 120-க்கும் மேற்பட்ட கிரிப்டோ பண்ட்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சிலவற்றை அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்-டில் உள்ள முக்கிய பிரமுகர்கள் நடத்தி வருகின்றனர்.

``2018-ம் ஆண்டுக்குள் ஒரு பிட்காயின் மதிப்பு 40,000 டாலரை எளிதாக எட்டும்’’ என்று ஹெட்ஜ் பண்ட் மேனேஜரான மைக்கேல் நோவாகிரேட்ஸ் தெரிவித்தார்.

மொத்த வர்த்தகத்தில் அமெரிக்க டாலர்-பிட்காயின் வர்த்தகத்தின் மதிப்பு 20 சதவீதமாக இருக்கிறது. ஜப்பானிய யென்னில் பிட்காயின் வர்த்தகத்தின் மதிப்பு 61 சதவீதமாகவும் தென் கொரியா வோன்-பிட்காயின் வர்த்தக மதிப்பு 11 சதவீதமாகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x