

புதுடெல்லி: வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
வெளிநாடுகளிலிருந்து மடிக்கணினி, டேப்லெட், ஆல்இன் ஒன்பெர்சனல் கம்ப்யூட்டர்கள், சர்வர்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அரசின் உரிமம் பெற்று அவற்றை இறக்குமதி செய்து கொள்ளலாம். ஆராய்ச்சிமற்றும் மேம்பாடு, பரிசோதனை, பழுதுபார்த்து திரும்ப அளித்தல், தயாரிப்பு மேம்பாட்டு நோக்கங்களுக்காக 20 பொருட்களுக்கு இறக்குமதி உரிமத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.